Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே ரெடியா…! நாடு முழுவதும் இன்று(14.11.22) 190 இடங்களில்…. மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…!!!

இந்தியாவில் கொரோனாவிற்கு பிறகு பலரும் வேலை வாய்ப்புகளை இழந்து தவித்து வந்தனர். பின்னர் இயல்புநிலைக்கு திரும்பி நிலையில் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் அரசு சார்பாக அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்பட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வருகிற 14-ஆம் தேதி இன்று நாடு முழுவதும் 190 இடங்களில் பிரதான் மந்திரி மந்திரி தேசிய பயிற்சி மேளா நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. dgt.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பித்தனர். விண்ணப்பதாரர்கள் ஐந்து முதல் 12 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதேபோல ஐடிஐ, டிப்ளமோ, முதுகலை பட்டதாரி, இளங்கலை பட்டாதரிகளும் கலந்து கொள்ளலாம்.

 

 

Categories

Tech |