தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன . அதனால் மக்கள் மீண்டும் வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் அரசு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் தனியார் துறைகள் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் தர்மபுரி மாவட்டத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நாளை நடைபெற உள்ளது.இந்த வேலை வாய்ப்பு முகாம் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நாளை காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெறும். இதில் 18 வயது நிரம்பிய ஆண் பெண் இருபாலரும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
இதில் முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.அதனால் இந்த முகாமில் படிக்காத மற்றும் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடி ஐ, பாலிடெக்னிக், பொறியியல் படித்த வேலைதேடும் இளைஞர்கள் அனைவரும் உரிய சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.