வருகின்ற 11-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாதந்தோறும் 2-வது மற்றும் 4-வது வெள்ளி கிழமைகளில் தனியார் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற 11-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் காலை 1௦ மணியில் இருந்து 2 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெறும்.
இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ள நிலையில், 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு 8-ஆம் வகுப்பில் இருந்து ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், பட்டப்படிப்பு படித்த தகுதியான நபர் தேர்வு செய்யப்படுவார்கள்.
முகாமில் கலந்து கொள்பவர்கள் 4 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ரேஷன் அட்டை, சாதி சான்று, கல்வி தகுதி சான்றிதழ் நகல்களுடன் வரவேண்டும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று இளைஞர்கள் பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் ஏதேனும் விபரங்களை அறிய 04175-233381 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.