அண்மையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுகளுக்கான அறிவிப்புகளை அறிவித்து இருந்தது. அதன் மூலமாக பல்வேறு பட்டதாரிகள் பயனடைந்து கொள்ளலாம் என்பதால் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதையடுத்து தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும் மாணவர்கள் எப்படியாவது அரசு வேலை வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் வேலைவாய்ய்ப்பு பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை கல்வி தொலைக்காட்சியில் தொடங்கி வைத்தார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கல்வி தொலைக்காட்சி மூலம் அனைத்து இளைஞர்களுக்கும் கட்டணமில்லா பயிற்சி வழங்கப்பட உள்ளது. பணம் கொடுத்து அரசு தேர்வுக்கு படிக்க வேண்டாம் இலவசமாகவே படித்து நல்ல வேலைக்கு செல்ல இது இளைஞர்களுக்கு இது அரிய வாய்ப்பு ஆகும்.