நாட்டில் உள்ள இளைஞர்களை குதூகலப்படுத்தும் வகையில் வருகின்ற 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ஷகிலா படம் வெளியாகிறது.
நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் ஷகிலா. அவரின் பாக்ஸ் ஆபிஸ் குயின் ஷகீலாவின் பயோபிக் ‘ஷகிலா’ என்ற பெயரில் இந்தியில் திரைப்படமாக உருவாகியுள்ளது. அந்தத் திரைப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்து, இளைஞர்களை குதூகலப்படுத்த வருகின்ற 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று, திரையரங்கில் வெளியாக உள்ளது.
இப்படத்தில் ஷகிலா கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ரிச்சா சதா நடித்துள்ளார். மேலும் படத்திற்கான பிரமோஷன் பணியில் ஷகிலாவை ஈடுபடுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.