சுவிட்சர்லாந்தில் இளைஞர்களின் மூளையை தாக்கும் மர்ம நோய் குறித்த விபரம் தெரியாமல் மருத்துவ நிபுணர்கள் குழம்பி வருகின்றனர்.
கனடாவின் நியூ பிரன்சுவிக் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்ட இந்த விசித்திர நோய் மருத்துவ நிபுணர்களுக்கு பயத்தையும் குழப்பத்தையும் அளிப்பதாக உள்ளது. இந்த நோய்க்கு எந்த அறிகுறியும் தென்படாது என்பது மற்றொரு பயம் அளிக்கக்கூடிய விஷயமாகும். நினைவாற்றல் பிரச்சனை தசை பிடிப்பு நடப்பதில் சிரமம் திடீர் உடல் எடை இழத்தல் போன்றவை இந்த நோயின் பாதிப்புகளாகும். மேலும் இளைஞர்களே இந்த நோயால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
அதுவும் ஆரோக்கியமான இளைஞர்களே பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 30 வயது பெண் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு பேசும் திறனை இழந்துள்ளதாகவும் தற்போது அவர் டியூப் மூலம் உணவு கொடுக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 20வயது செவிலியர் ஒருவருக்கு இந்த நோய் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நியூ பிரன்சுவிக் பகுதியில் இதுவரை நாற்பத்தி எட்டு இளைஞர்கள் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆனால் 150க்கும் மேற்பட்டோர் இந்த வகை நோயால் பாதிக்கப்பட்டு வெளியே தெரியாமல் இருக்கலாம் என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.