இந்தியாவில் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என பிரதமர் மோடி அன்புடன் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்திய ஜனநாயகத்தை காக்க இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அரசியலுக்கு வந்தால் இளைஞர்கள் சீரழிந்து விடுவார்கள் என்று முன்பெல்லாம் கூறுவார்கள். இன்று நேர்மையான அவர்களும் அரசியலுக்கு நுழைவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் அனைவருக்கும் சம உரிமை உண்டு.
தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இளைஞர்கள் நினைத்தால் நம் நாடு மேலும் முன்னேறும். அதனால் இந்திய ஜனநாயகத்தை காப்பதற்கு இளைஞர்கள் அரசியலுக்கு வர முன்வர வேண்டுமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.