Categories
மாநில செய்திகள்

இளைஞர்கள் கவனத்திற்கு…. “ரூ10,00,000 முதல் ரூ5,00,00,000” புதிய திட்டம் அறிமுகம்….!!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பலர் வேலை வாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவது, உள்நாட்டில் உற்பத்தி அதிகரித்து, இந்திய பொருளாதாரத்தை உயர்த்த பல தொழில்கள், சிறு குறு தொழில்களை ஊக்குவிக்கும் விதமாக உயர்த்தும் விதமாக மத்திய அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில் தமிழகத்திலும் நீட்ஸ் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்காக ரூபாய் 10 லட்சம் முதல் 5 கோடி வரை மாவட்ட தொழில் மையம் மூலம் கடன் உதவிகளை பெறலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு வயது வரம்பு 21 லிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும் எனவும், குடும்ப வருமானம் ஆண்டுக்கு இவ்வளவுதான் இருக்கவேண்டும் என்ற வரம்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான விவரங்களுக்கு www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தை சென்று பார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |