Categories
மாநில செய்திகள்

இளைஞர்கள் கவனத்திற்கு”…. நாளை நடைபெறும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்…. முழு விவரம் இதோ….!!!!

திறந்த நிலை பல்கலைக்கழக பதிவாளர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கு.ரத்தினகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகிறது. அதில் கடந்த 3  ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர். அதன் தொடர்ச்சியான இந்த ஆண்டுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பல்கலைக்கழக வழக்கத்தில் வருகின்ற சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு  மாணவர்களை வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்கின்றனர். மேலும் இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புகளை தரக்கூடிய நிறுவனங்களும் உள்ளனர்.

இதில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் தற்போது படித்து வரும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் பங்கு பெறலாம். இதற்கான விண்ணப்பங்களை வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பணி நியமனை ஆணையை  வழங்குவார். மேலும் இது குறித்து தகவல்களை 97912345586, 8667511342 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெற்று கொள்ளலாம் என அந்த  அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |