மாவட்ட ஆட்சியர் மதுசுடன் கட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மத்திய மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. மேலும் அரசு வேலையை தனது கனவாக கொண்டு காத்திருக்கும் இளைஞர்கள் போட்டி தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.
தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPAC GR -II &II A ஆகிய தேர்வுகளுக்கு நேரடியாக நடைபெறுகின்ற இந்த பயிற்சி வகுப்புகளில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதனையடுத்து தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமத்தால் 444 உதவி ஆய்வாளர் பதவிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை முதல் தொடங்குகிறது. எனவே இந்த வகுப்புகளில் கலந்துகொண்டு தேர்வில் வெற்றி பெற விரும்பும் இளைஞர்கள் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகத்திற்கு சென்றோ அல்லது 04575240436 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு வகுப்புகளில் சேரலாம் என மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.