இளைஞர்கள் மத்தியில் கொரோனா பரவல் அதிகரிப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா பாதிப்பு 20,30 மற்றும் 40 வயதுக்குட்பட்டவர்கள் மூலமாக அதிக அளவில் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அவர்களுள் பெரும்பாலானோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியாததால், அவர்களால் மற்றவர்களுக்கும் எளிதில் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்களின் விகிதம் அதிகமாக உள்ளது. அதன்மூலம் சுகாதார வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் முதியோரும் அதிக பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தற்போது மாற்றம் அடைந்து உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியிருக்கிறது. தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும், அனைத்து விதமான மேம்பாட்டு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அதனுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.