தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலான இளைஞர்கள் வேலையை இழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வேலை இல்லா நிலையை போக்குவதற்கு பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்படுத்தி அதன் மூலம் வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கி தருகிறது. இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க ஈரோட்டில் பிப்ரவரி 9 (இன்று) வேலைவாய்ப்பு முகாமை நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த முகாம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற இருக்கிறது.
இந்த முகாமில் 22-35 வயது இருப்பவர்கள் வரை கலந்துக்கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் இதில் கலந்துக்கொள்ள 162.5 செ.மீ. உயரம் இருப்பவராகவும் இருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் செவிலியர் பணி இடத்திற்கு பிஎஸ்சி நர்சிங், டிஜிஎன்எம், பிஎஸ்சி விலங்கியல், தாவரவியல், உயிரி வேதியியல், நுண் உயிரியல், உயிரி தொழில்நுட்பம், வேதியியல் போன்றவற்றில் ஏதேனும் ஒரு படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் இதில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஏஎன்எம், டிஎப்டிஎன், டிஎன்ஏ, டிஎம்எல்டி அல்லது டி.பார்ம் போன்ற படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல் வாகன ஓட்டுநர் பணிக்கு இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சமாக 3 வருடங்கள் முடிவடைந்து இருக்க வேண்டும். இந்த முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு ரூபாய் 14,996 ஊதியம் மற்றும் இதர படிகள் வழங்கப்படுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படுவர்கள் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டத்திலும் 12 மணி நேர சுழற்சி முறையில் இரவு அல்லது பகல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும் இம்முகாமில் பங்கேற்பவர்கள் தங்களின் அசல் சான்றிதழை கொண்டு வர வேண்டும். இது குறித்த கூடுதல் தகவல்களை பெற 7418308513, 9944426044 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.