லாத்வியா நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாத்வியா நாட்டைச்சேர்ந்த 29 வயது இளைஞர் Normunds Kindzulis. இவரை மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து எரித்துக் கொன்றிருக்கிறார்கள். இந்த இளைஞர் அவசர உதவி குழுவில் பணியாற்றி வருகிறார். இவர் ஓரினச்சேர்க்கையாளர் ஆவார். இதனாலேயே அவரது வீட்டிற்கு சிலர் தீ வைத்துள்ளார்கள்.
இக்கொடூர சம்பவத்தில், படுகாயத்துடன் மீட்கப்பட்ட Normunds மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மற்றொரு ஓரினச்சேர்க்கையாளர் ஒருவர், இவரை காப்பாற்றுவதற்காக சென்றுள்ளார்.
அவரும் நெருப்பில் சிக்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து ஓரினச் சேர்க்கையாளர்களின் ஆதரவாளர்கள், இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுமட்டுமல்லாமல், காவல்துறையினர் அந்த இளைஞன் தானாகவே வீட்டிற்கு தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று, வழக்கை விசாரிக்க மறுத்துள்ளனர். எனினும் பொதுமக்களின் வலியுறுத்தலின் படி, தற்போது விசாரிக்க சம்மதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.