பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக இருக்கின்ற உதவியாளருடன் கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கடப்பிரியா கூறியுள்ளார். இது பற்றி ஆட்சியர் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு கொண்டிருக்கின்ற இளைஞர் நீதி குடும்பத்தில் உதவியாளர்டன் கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் ஆங்கில தட்டச்சு தேர்வில் மேல்நிலை தேர்ச்சி மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் கணினி கல்வியில் பட்டய படிப்பு பெற்று ஏதாவது ஒரு நிறுவனத்தில் கணினி இயக்குவதில் ஓராண்டு அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இதற்கு 31. 8.2022 இல் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.மேலும் இந்த பணியிடத்திற்கு தலா 11,916 தொகுப்பு ஊதியமாக வழங்கப்படுகிறது. மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://perambalur.nic.in/ என்னும் வலைதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அக்டோபர் மூன்றாம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு திட்டம்-164, 2 வது தளம் எம் எம் விலாஸா திருச்சி பிரதான சாலை பெரம்பலூர்-621212 எனும் முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள 04328-275020 என்னும் எண்ணில் அல்லது https:// cdn.s3waas.gov.in./s3550a141f12de6341fba65b0ad0433500/uploads/2022/09/202209169 என்னும் லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.