சட்டமேதை அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய கருத்தை வெறுக்கிறோம் என இயக்குனர் நவீன் கூறியுள்ளார்.
‘அம்பேத்கர் அண்ட் மோடி’ என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதினார். அதில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரையும் பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு எழுதப்பட்டிருந்தது. அதில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
அவரது கருத்துக்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ட்விட்டர் தளத்தில் இளையராஜாவுக்கு எதிராக ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான நவீன் இது பற்றிய கருத்து ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் “இளையராஜா தமிழர்களை தாலாட்டிய தாய். தவறிழைத்தவர் தாயாயினும் சுட்டிக்காட்டும் பிள்ளைகளே அறிவார்ந்த சமூகமாக இருக்க முடியும். அவர் கருத்தை வெறுக்கிறோம், அவரை அல்ல. ராஜாசார் இசை எங்கள் மூச்சு. அய்யா அம்பேத்கர் எங்கள் தன்மானம். சுவாசிப்பதற்காக தன்மானத்தை என்றும் இழக்கமாட்டோம்.” என்று தெரிவித்துள்ளார்.