Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘இளையராஜாவுக்கு முழு சுதந்திரம்’…. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்…..!!!!

புத்தக முன்னுரை ஒன்றில் ‘பிரதமர் மோடியின் ஆட்சியைக் கண்டு அம்பேத்கர் பெருமைப்படுவார்’ என்று இசையமைப்பாளர் இளையராஜா பேசினார். அவரின் இந்த  பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பெரும் விவாதமும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இசையமைப்பாளர் இளைராஜா மீது எழுந்து வரும் விமர்சனங்கள் குறித்து தெலுங்கனா மாநில கவர்னரும், புதுச்சேரி மாநில துணை நிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரதப் பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா? கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா? தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்கச் சொல்வோம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |