தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் இப்போது விக்ரம் நடிப்பில் “தங்கலான்” படத்தை இயக்குகிறார். இவர் நீலம் பண்பாட்டு மையம் எனும் அமைப்பின் வாயிலாக சென்ற 2 ஆண்டுகளாக “மார்கழியின் மக்களிசை” என்ற இசை விழாவை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பங்கேற்றார்.
அப்போது பா.இரஞ்சித் பேசியதாவது, “இளையராஜா என்னுடைய உணர்வு. நமக்கு உடம்பில் கிள்ளினால் வலிப்பது போல் தான் இளையராஜா எனக்கு. அவர் பாடல்களை கேட்கும் போது எமோஷனலாக இருக்கும். அதுபோல் தான் நான் யுவன் ஷங்கர் ராஜாவை பார்க்கிறேன். இவருடைய இசை பல்வேறு நேரங்களில் என்னை ஊக்குவித்து இருக்கிறது. என்னோட வலியை இசையோடு கலந்து அதில் இருந்து வெளியே வந்திருக்கிறேன். இந்த மேடையில் யுவன் ஷங்கர் ராஜா வந்து நிற்பது எனக்கு பெருமையாகவுள்ளது” என்று அவர் பேசினார்.