Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இளையோர் மன்ற விருது… விண்ணப்பங்கள் வரவேற்பு… வெளியான தகவல்…!!!!

தஞ்சை மாவட்ட நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் திருநீலகண்டன் செய்தி  குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இளைஞர் மன்றங்களின் சேவைகளை பாராட்ட மற்றும் ஊக்கப்படுத்துவதற்காக வருடம் தோறும் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான இளையோர் மன்ற விருதினை பெற நேரு யுவகேந்திரா உடன் இணைக்கப்பட்டுள்ள இளைஞர் மகளிர் மன்றங்கள் மாநில சங்க சட்டத்திலும் பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கு கடந்த 2021 ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2022 மார்ச் 31-ஆம் தேதிக்குள் தங்கள் பகுதிகளில் சேவை செய்வதற்கான நற்பணிகளை ஆதாரங்களுடன் இணைத்து விண்ணப்பித்திருக்க வேண்டும்.

மேலும் மாவட்ட அளவில் சிறந்த இளைஞர் மன்றமாக தேர்வு செய்யப்படும் மன்றத்திற்கு ரூ.25,000 மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதை போல் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் மன்றம் மாநில அளவிலான விருது போட்டிக்கு தகுதி பெறுகிறது. இதற்கான விண்ணப்பத்தினை வருகிற 15-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தை தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை, கணபதி நகரில் அமைந்துள்ள  நேரு யுவகேந்திரா அலுவலகதிற்கு சென்று  நேரிலோ  அல்லது மின்னஞ்சல் மூலமாவோ  விண்ணப்பித்துக் கொள்ளலாம் என என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |