Categories
இந்திய சினிமா சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

இழந்த நேரத்தை மீட்க முடியாது : ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட் …!!

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள்  எழுந்து கொண்டு இருக்கும் நிலையில், அவர் இறுதியாக நடித்த தில் பட்சாரா  திரைப்படம் சமீபத்தில் தான் OTT தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்டது. இதற்க்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். அந்த படதிற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் பேசியபோது, பாலிவுட்டில் தன்னுடைய வாய்ப்புகளை பறிப்பதற்கும், தடுப்பதற்கு நிறைய பேர் வேலை செய்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இது இந்திய சினிமாவில் பெரிய ஒரு விமர்சனத்துக்கு உள்ளாகியது.

ஒரே மேடையில் இரண்டு ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் கூறிய இந்த கருத்து தமில் சினிமா மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவர் பேசிய விஷயங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டது. இந்த நிலையில்தான் சேகர் கபூருக்கு பதில் அளிக்க கூடிய ஏ ஆர் ரகுமான் தற்போது ஒரு ட்விட் போட்டுள்ளார். இழந்த பணத்தை மீட்டுவிடலாம், இழந்த புகழை மீட்டு விடலாம், ஆனால்  நேரம் திரும்ப வராது  அமைதியாகக் கடந்து செல்வதே சிறந்தது நாம் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளன என்பதை அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |