Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இழப்பீடு கேட்டு போலீஸ்காரர் தொடர்ந்த வழக்கு…. தள்ளுபடி செய்த நுகர்வோர் நீதிமன்றம்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஆனையூர் பகுதியில் ஓய்வு பெற்ற போலீஸ்காரரான நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2020-ஆம் ஆண்டு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்துவிட்டு அரசு பேருந்தில் ஏறி மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு டிக்கெட் எடுத்தேன். இந்நிலையில் மேலகரந்தை என்ற இடத்தில் புறவழிச் சாலையில் இரவு உணவுக்காக பேருந்து நிறுத்தப்பட்ட போது நான் கீழே இறங்கி சாப்பிட்டு வந்தேன். நான் வருவதற்குள் பேருந்து புறப்பட்டு சென்றதால் வேறு ஒரு பேருந்தில் டிக்கெட் எடுத்து மதுரை வந்தேன்.

பின்னர் செக்கானூரணி பணிமனைக்கு சென்று பேருந்தில் இருந்த எனது உடமைகளை பெற்று கொண்டேன். அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் கண்டக்டரின் கவன குறைபாடு காரணமாக எனக்கு வீண் அலைச்சலும், மன உளைச்சலும் ஏற்பட்டது. எனவே 2 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பாரி, உறுப்பினர்கள் விமலா, வேலுமணி ஆகியோர் சம்பந்தப்பட்ட கண்டக்டரை தான் எதிர் தரப்பாக சேர்த்திருக்க வேண்டும். ஆனால் அரசு போக்குவரத்து கழக இயக்குனரை சேர்த்தது பொருந்தாது என உத்தரவு பிறப்பித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Categories

Tech |