Categories
தேனி மாவட்ட செய்திகள்

இழப்பீடு தொகை வழங்கவில்லை… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு… அரசு பேருந்து ஜப்தி…!!

போக்குவரத்து கழகத்தினர் இழப்பீடு தொகையை வழங்காததால் அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரையில் முத்துராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு முத்துராஜன் தேனியில் இருந்து இருசக்கர வாகனத்தில் பெரியகுளம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சரத்துபட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து முத்துராஜின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் முத்துராஜன் படுகாயம் அடைந்த்துள்ளர்.

இதனையடுத்து இந்த விபத்திற்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என முத்துராஜன் பெரியகுளம் அரசு போக்குவரத்து கழகத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வலக்கை விசாரித்த நீதிபதி திலகம் அரசு போக்குவரத்து கழகம் முத்துராஜனுக்கு 16,28,508 ரூபாய் இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் அரசு போக்குவரத்து கழகத்தினர் முத்துராஜனுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகையை வழங்கவில்லை.

இதனால் முத்துராஜன் மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் நீதிபதி பெரியகுளம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்தை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நீதிமன்ற ஊழியர் ரமேஷ் தலைமையில் பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை செல்வதற்கு தயாராக இருந்த அரசு பேருந்தை ஜப்தி செய்துள்ளனர்.

Categories

Tech |