கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் தொற்று காரணமாக பலரும் தங்களது உறவினர்களை இழந்து தவித்து வருகின்றனர். பெரும்பாலும் குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து, வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியது கட்டாயம், கடமை அரசுக்கு உள்ளது. இழப்பீடு எவ்வளவு என்பதை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்யலாம். மேலும் இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை 6 வாரத்தில் வகுக்கவும் மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.