Categories
உலக செய்திகள் கொரோனா

இழப்புகளைச் சந்தித்த மக்கள்…. சீனாதான் பொறுப்பேற்கும்…. சட்ட மசோதா தாக்கல்… அமெரிக்கா அரசு அதிரடி…!!

கொரோனாவால் பல இழப்புகளை சந்தித்த மக்கள் சீனாவிடம் இழப்பீடு கோருவதற்கான சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் சீனா ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது  என்றும் அந்த கொடிய வைரஸை சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு அனுப்பி விட்டதாகவும் அமெரிக்க தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில் தற்போது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனையில் அமெரிக்க மக்கள் சீனா மீது வழக்கு தொடர வகை செய்யும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி ட்ரம்பின் குடியரசு கட்சியை சார்ந்த 6 எம்பிக்கள் இந்த சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்கள். இந்த மசோதா மட்டும் நிறைவேறி சட்டமாக்கப்பட்டால் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சீனா தான் காரணம் அல்லது கணிசமாக பங்களித்தது என்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமெரிக்க மத்திய நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்படும்.

அதோடு கொரோனாவை உருவாக்கிய சீனாவின் பொறுப்பில்லாத  செயலுக்கு அந்த நாட்டினுடைய சொத்துக்களை முடக்கவும் அமெரிக்க நீதிமன்றங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும். இந்த சட்ட மசோதாவை முன்வைத்தவர்களில் ஒருவரான குடியரசு கட்சியை சேர்ந்த எம்பியான மார்தா மெக்ஸி கூறும்போது, “சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொய்கள், பாதிக்கப்பட்ட மக்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள், வணிகம் மற்றும் பொருளாதார இழப்பை சந்தித்தவர்கள், கொரோனா இல்லாமல் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படைந்தோர்கள் போன்றோரை சீனா பொறுப்பேற்க  வைப்பதற்கும் இழப்பீடு பெறுவதற்கும் இந்த சட்ட மசோதா வழி செய்யும்” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |