Categories
மாநில செய்திகள்

இழுத்து மூடப்படும் டாஸ்மாக் கடைகள்…. தமிழக அரசு எடுக்கும் முடிவு?….அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!

பாமக நிறுவனர் ராமதாஸ், மலைப் பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளார்.மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் மது அருந்தி விட்டு காலி மதுபாட்டில்களை காட்டிற்குள் வீசுவதால் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் மாற்றுத் திட்டத்தை, வருகிற  25-ஆம் தேதிக்குள் தயாரிக்க வேண்டும்.

அப்படி இல்லாவிட்டால் மலைப் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை மூட ஆணை பிறப்பிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்து இருக்கிறது. எனவே இது வரவேற்கத்தக்கது.மேலும் மலைப் பகுதிகளில் வன உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளான பாரதிதாசன், சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்நிலையில் மது வணிகத்தின் மூலம் லாபம் ஈட்டும் டாஸ்மாக் நிறுவனமானது, வன உயிரினங்களின் நலனிலும் அக்கறை காட்ட வேண்டும் என்று கண்டித்துள்ளனர். இதையடுத்து காலி மது பாட்டில்களை வன விலங்குகள் நடமாடும் பகுதிகளில் வீசப்படுவதை தடுக்கும் வகையில், மலைப் பகுதிகளில் மட்டும் காலி மதுபாட்டிகளை வாங்குவதற்கு வசதியாக மையங்களைத் திறக்கலாம். மேலும் அந்த மையங்களில் காலி பாட்டில்களை வழங்குவோருக்கு ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வீதம் ஊக்கத்தொகை வழங்கலாம் என இது போன்ற யோசனையை  நீதிபதிகள் தெரிவித்து, அதை செயல்படுத்துவது பற்றிய முடிவை வரும்  25-ஆம் தேதிக்குள் எடுக்கும்படி டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனை தொடர்நது மலைப்பகுதிகளில் வன விலங்குகள் நடமாடும் பகுதிகளில் காலி மது பாட்டில்கள் வீசப்படுவதை தடுக்க வேண்டும் என்பதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டும் அக்கறை பாராட்டத்தக்கது. இருப்பினும், அவர்கள் தெரிவித்துள்ள மாற்றுத் திட்டமோ வன விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்காது என்பது தான் எதார்த்தம். ஏனெனில் காலி மது பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் ரூ.10 என்பது கவர்ச்சிகரமான அறிவிப்பாகத் தோன்றினியும்,  மது குடித்த பிறகு மனிதர்கள் மனிதர்களாக இருப்பதில்லை…. காலி மது பாட்டில்களை ஒப்படைத்து ரூ.10 பெறலாம் என்ற மனநிலையிலும் அவர்கள் இருக்க மாட்டார்கள் என்பது தான் உண்மையாகும்.

மேலும் மது போதை கோழைகளுக்கும் பொய்யான துணிச்சலைக் கொடுக்கிறது; அது மனிதர்களை மிருகமாக மாற்றுகிறது. அதனால், அந்த நேரத்தில் சாகசங்களை செய்து தங்களின் வீரத்தை வெளிப்படுத்துவதற்கு தான் மது குடித்த மனித மிருகங்கள் முயலும். அதனால், மது போதையில் காலி பாட்டில்களை உடைத்து சேதப்படுத்துவதற்கு தான் அவர்கள் துடிப்பார்களே தவிர, வன விலங்குகளுக்கு பாதிப்பைத் தடுக்கும் வகையில் காலி பாட்டில்களை அதற்கான மையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று விரும்ப மாட்டார்கள்.

இந்நிலையில் நடப்பாண்டில் மார்ச் 15-ஆம் தேதி வரையிலான 75 நாட்களில் மட்டும் 30 யானைகள் உயிரிழந்துள்ளன. அதனால் டாஸ்மாக் நிறுவனத்திற்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படப் போவதில்லை. அதனால், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளிலும், சத்தியமங்கலம் உள்ளிட்ட வனப்பகுதிகளிலும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட அரசு ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, அப்பகுதிகளுக்கு வெளியிலிருந்து மது பாட்டில்கள் கொண்டு செல்லப்படுவதையும் தமிழக அரசு தடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |