Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இவங்களுக்கும் கொரோனா வந்துருச்சா… பரிசோதனை முடிவு… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!

ஸ்ரீ ரங்கம் சட்டமன்ற உறுப்பினராகவும், சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும் இருந்த வளர்மதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உலகெங்கிலும் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையினால் பல ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சில முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலரும் இந்த கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினராகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும் இருந்த வளர்மதி என்பவர் கடந்த சில நாட்களாகவே சளி மற்றும் காய்ச்சல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டதுள்ளது. அப்போது வளர்மதிக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதால் சிகிச்சைக்காக திருச்சி மாவட்டத்தில் உள்ள  அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |