மதுரையில் தோட்டத்திற்குள் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழகத்தில் வருகின்ற ஏற்ற மாதம்6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இதனால் அவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
அந்த வகையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கதிரேசன் என்பவர் அவரது சொந்த தோட்டத்திற்குள் 11/2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் 1 1/2கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் கதிரேசன் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.