Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இவங்களுக்கு எவ்ளோ நல்ல மனசு..! சமூக அக்கறையோடு செயல்படும் ஆசிரியை… பொதுமக்கள் பாராட்டு..!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் பகுதியில கொரோனா தொற்றை தடுப்பதற்காக சுமார் 10 லட்சம் முககவசங்களை ஆசிரியை இலவசமாக வழங்கியதை பொதுமக்கள் பாராட்டினர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கருப்பம்புலம் கிராமத்தில் வசந்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆசிரியை. இவர் அண்டர்காடு சுந்தர விலாஸ் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கொரோனா தாக்கத்தின் போது கடந்த வருடம் குடிசைவாழ் மக்கள், இசைக்கலைஞர்கள், நரிக்குறவர்கள், நாடோடிகள், வட மாநில தொழிலாளர்களுக்கு மாஸ்க், உணவு உள்ளிட்ட பொருள்களை ரூபாய் 50 லட்சம் செலவில் வழங்கியுள்ளார்.

தற்போது இவர் கணவர் சித்திரவேல் உதவியோடு சமூக அக்கறையோடு 10 லட்சம் முக கவசங்களை வாங்கி அதனை வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார். சித்திரவேல் மற்றும் ஆசிரியை வசந்தாவின் சமூகப் பணியை பொதுமக்கள் பாராட்டினர். இதுவரை 50-க்கும் மேற்பட்ட விருதுகள் இவர்களின் சமூகப் பணியை பாராட்டி சமூக நல அமைப்புகள் வழங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |