கொரோனா தடுப்பு ஊசி அத்யாவசியமாய் தேவைப்படுபவர்களுக்கு கிடைக்குமாறு செய்ய வேண்டும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அறிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை அன்று கொரோனா மாநாட்டில் பேசிய பில்கேட்ஸ், “கொரோனா தடுப்பூசியை தேவைப்படும் மக்களுக்கும் நாடுகளுக்கும் வழங்காமல் அதிக விலைக்கு வாங்க அனுமதித்தால் அது மிகவும் கொடுமையான விஷயம். உலகெங்கிலும் பல நாடுகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அமெரிக்காவில் உள்ள சில அதிகாரிகளுடன் தடுப்பூசி கண்டுபிடிக்க அமெரிக்கா பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்து அந்நாட்டில் குடியிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. கொரோனா தடுப்பூசிகளின் பொருட்களை பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய அளவிலான திட்டத்தில் சேருவதற்கான வாய்ப்பை பிரிட்டன் அரசு நிராகரித்துள்ளது.