Categories
சினிமா தமிழ் சினிமா

இவங்களுமா….!! மனைவியுடன் குத்தாட்டம் போட்ட பிரபல டைரக்டர்…. வைரலாகும் வீடியோ….!!!

பிரபல பாடலுக்கு ரீலிஸ் செய்து இயக்குனர் அட்லீ தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி பரவி வருகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவர் இயக்கிய முதல் படமான ராஜா ராணி திரைப்படம் மெகாஹிட் வெற்றியை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் அட்லி நடிகர் விஜய் வைத்து இயக்கிய ‘தெறி’ திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. மேலும் அவர் மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்து வந்தார். இந்நிலையில் தற்பொழுது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து திரைப்படம் இயக்கி வருகிறார்.

டைரக்டர் அட்லீ  சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது மனைவியுடன் இருக்கும் புகைபடங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இதனை போல் தற்போது நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து செம வைரல் ஆகியுள்ளது. இந்த பாடலுக்கு பல திரைப்பிரபலங்கள் ரிலீஸ் செய்து வெளியிட்டு வருகின்றனர்.  இந்த வகையில் இவர்களைத் தொடர்ந்து தற்போது அட்லீ மற்றும் அவரது மனைவி இவருடன் இணைந்து இயக்குனர் முத்துராஜ்யும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை தனது வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |