Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இவங்களும் ஓட்டு போட்டாச்சு…. 100 சதவீத வாக்குப்பதிவு அவசியம்…. நெல்லையில் சூடு பிடிக்கும் தேர்தல் களம்….!!

நெல்லையில் காவல்துறையினர் தபால் ஓட்டு போடும் பணியை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் 100 சதவீத வாக்குப்பதிவை முன்னிட்டு ஊனமுற்றோர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் தபால் ஓட்டு வழங்கப்பட்டது. இதனையடுத்து மாவட்டம் வாரியாக தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர்களுக்கு தபால் ஓட்டு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பணிப்புரியும் காவல்துறையினருக்கு தபால் ஓட்டு அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் குழு நெல்லையிலிருக்கும் செண்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில் செய்திருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர்கள் தங்களது வாக்குகினை பதிவு செய்வதை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவும், சில முக்கிய காவல்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.

Categories

Tech |