திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் திண்டுக்கல்லை அடுத்துள்ள புளியம்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அங்கு பெண் ஒருவரின் வீட்டில் சட்டவிரோதமாக மது பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் மது விற்பனையில் ஈடுபட்ட சுமதி (40) என்ற பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.