Categories
உலக செய்திகள்

“இவங்களை உள்ள விடக்கூடாது”… தடையை நீக்கிய ஜோ பைடன்… பாதுகாப்பை வலியுறுத்திய முன்னாள் அமெரிக்க அதிபர்…!!

பயங்கரவாதத்திலிருந்து அமெரிக்காவை பாதுகாத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து டொனால்டு டிரம்ப், அதிபர் ஜோ பைடனை அறிவுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டை “தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்திலிருந்து” பாதுகாப்பதற்காக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சில இஸ்லாமிய நாடுகளின் பயண தடையை மீண்டும் நிலைநாட்டுமாறு தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து டொனால்டு டிரம்ப் திங்களன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் நம் நாட்டை ஜோ பைடன் தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள விரும்பினால் வெளிநாட்டு பயண தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து அந்த அமைப்போடு சேர்ந்து கொள்ள விரும்புவோர் மீதான அனைத்து தேவைகளையும் நான் அமல்படுத்திய அகதிகள் கட்டுப்பாடுகளுடன் மறுபடியும் நிலைநிறுத்த வேண்டும் என்று கூறினார். இந்த பயங்கரவாதிகள் ஆன்லைனில் உலகெங்கிலும் ஆள் சேர்த்து கொள்கிறார்கள்.

எனவே தீவிரவாதத்தை நாம் புத்திசாலித்தனமாக நம் நாட்டிற்கு வெளியே வைத்திருக்க விதிகளை பொது அறிவுடன் செயல்பட வேண்டும். மேலும் நாம் ஐரோப்பா செய்த பல்வேறு குடியேற்ற தவறுகளை மீண்டும் செய்து விடக்கூடாது. அதற்கும் மேலாக “டிரம்ப்பின் முன்னுரிமை” அமெரிக்கா தான் என்று டொனால்டு டிரம்ப் தனது அறிக்கையில் கூறினார். டொனால்டு டிரம்ப் ஆட்சியின்போது ஈராக், ஈரான், லிபியா, சிரியா, சூடான் ஆகிய பல இஸ்லாமிய நாடுகளுக்கும் அவர் பயணத் தடை விதித்திருந்தார். ஆனால் அந்த தடைகள் அனைத்தையும் ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற பின்னர் நீக்கிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |