Categories
சினிமா

“இவங்கள லவ் பண்ண கூடாது”…. சகோதரிக்கு அட்வைஸ் கூறிய ஜான்வி கபூர்…..!!!!

தென் இந்திய திரைப்படங்களிலும், இந்தி திரையுலகிலும் புகழ்பெற்ற கதாநாயகியாக விளங்கிய மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் மலையாளத்தில் வெற்றியடைந்த ஹெலன் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து பாராட்டு பெற்றார். தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியாகிய கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இந்தி ரீமேக் ஆன குட்லக் ஜெர்ரி படத்திலும் அவர் நடித்துள்ளார்.

அவரது தந்தை போனிகபூர் தமிழில் அஜித் குமார் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தயாரித்துள்ளார். இதற்கிடையில் ஜான்வி கபூரின் தங்கையான குஷிகபூரும் திரையுலகில் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார். இந்நிலையில் ஜான்வி கபூரிடம் சினிமாவில் நடிக்கவரும் உங்கள் சகோதரி குஷிக்கு என்ன அட்வைஸ் கூறுவீர்கள் என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்து ஜான்வி கபூர் கூறியதாவது, “நடிகரை மட்டும் காதலிக்க கூடாது என்று சொல்லுவேன். அத்துடன் முதலில் உன்னுடைய மதிப்பு என்ன என்பதை தெரிந்துகொள். அதுவே உன்னை வழிநடத்தும். நடிகை என வந்துபின் பல பேர் விமர்சனம் செய்யலாம். அதனை கண்டுக்கொள்ளக்கூடாது என அட்வைஸ் சொல்வேன்” என்று கூறினார்.

Categories

Tech |