சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கொரோனா பாதித்தவர்களை இரண்டு மணி நேரத்தில் அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் கொரோனா தடுப்புபணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது, பொதுமக்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் மருத்துவ முகாம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் அரசு தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், நகர் நல மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களிலும் பரிசோதனை நடைபெற்று வருகிறது.
சளி, காய்ச்சல் அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும் கொரோனா பாதித்தவர்களை இரண்டு மணி நேரத்திற்குள் அரசு மருத்துவமனையில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல ஆலோசனைகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு கூட்டத்தில் தெரிவித்தார்.