சமூக வலைத்தளங்களில் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். இதனால் இவருக்கு என்ற ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உங்களை சுற்றி பொறாமை குணம் கொண்டவர்கள் இருப்பது மிகவும் ஆபத்தானது.நீங்கள் அவர்களை குடும்பத்தில் ஒருவராக அல்லது நண்பர்களாக பார்த்தாலும் அவர்கள் உங்களை போட்டியாகவே பார்ப்பார்கள். இறுதியில் இந்த பிரபஞ்சம் அவர்களை களை எடுக்கும். நீங்கள் போராட வேண்டாம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Categories