Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இவங்க இப்படி செய்யிறதுனால கருச்சிதைவு ஏற்படுது…. பொதுமக்கள் கோரிக்கை…. ராணிப்பேட்டை மாவட்டம்….!!

ராணிப்பேட்டையில் இருக்கும் கல்குவாரியில் வெடி வைத்து பாறைகளை உடைப்பதால் அப்பகுதியிலிருக்கும் வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவிலிருக்கும் அனந்தமலைப்பகுதிகளில் எண்ணற்ற கல்குவாரிகள் உள்ளது. இக்குவாரிகளில் பாறைகளை உடைப்பதற்காக வெடிகள் வைக்கப்பட்டு பின்னர் அதனை ராட்சச எந்திரம் மூலம் நொறுக்கி ஜல்லியாக மாற்றுவது வழக்கம். இந்நிலையில் இதில் வைக்கப்படும் வெடியின் அதிகளவு சத்தத்தினால் அதனை சுற்றியுள்ள பகுதியலிருக்கும், அதாவது அனந்தமலை, மேட்டூர் உட்பட சில கிராமங்கள் மிகவும் பாதிக்கப்படுகிறது.

அதாவது அளவுக்கதிகமான சத்தத்தினால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு நபர்களின் மீது விழும் அபாயம் உள்ளது. மேலும் இப்பகுதியிலிருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனைக்கு உடனடியாக மாவட்ட நிர்வாகம் தீர்வு எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |