தெலுங்கில் கடந்த 2017 ஆம் வருடம் வெளியான அர்ஜுன் ரெட்டி எனும் திரைப்படத்தின் மூலமாக இந்தியா முழுவதும் பிரபலமாக வலம் வந்தவர் விஜய் தேவரகொண்டா. என்னதான் விஜய் தேவரகொண்டா பல வருடங்களுக்கு முன்பே சினிமா துறையில் அறிமுகமானாலும் அவருக்கு சரியான அங்கீகாரம் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தான் கிடைத்துள்ளது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து அர்ஜுன் ரெட்டி திரைப்படம் பழமொழிகளில் ரீமேக்ஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகராக திகழ்ந்து வருகின்றார் விஜய் தேவரகொண்டா. இந்த நிலையில் தற்போது லைகர் எனும் திரைப்படத்தில் குத்து சண்டை வீரராக நடித்து வருகின்றார். இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. இந்த படம் வெளியாக இருக்கின்ற நிலையில் இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் விஜய் தேவரகொண்டா ஈடுபட்டு வருகின்றார்.
அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர் நோட்டா படத்திற்கு பின் நேரடி தமிழ் படத்தில் நடிக்காததன் காரணம் பற்றி கேட்டிருக்கின்றார். அதற்கு பதில் அளித்த விஜய் தேவரகொண்டா எனக்கு பா.ரஞ்சித், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பதற்கு மிகவும் ஆசை. மேலும் லோகேஷ் கனகராஜன் யூனிவெர்சில் இணைய நான் காத்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் எப்போது அழைத்தாலும் அவர்களின் இயக்கத்தில் நடிக்க சென்று விடுவேன் என விஜய் தேவரகொண்டா கூறி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.