கோவையை தொடர்ந்து சென்னையிலும் ஒரு மர்ம வாகனம் லயோலா கல்லூரி வளாகத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டுள்ளது. இது ஏன் இங்கு நிறுத்தப்பட்டிருக்கிறது என்பது குறித்து பொது மக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.
கோவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜிசிடி கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இதே வாகனம் கொண்டுவரப்பட்டது. இதை தொடர்ந்து இன்று சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் இந்த லாரி கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது. இது கழிவறை வசதிகள் கொண்டிருக்கும் கண்டெய்னர் லாரி போல் உள்ளது.
கல்லூரி வளாகத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டிடங்களில் கழிவறை வசதிகள் இருக்கும்போது, இந்த மர்ம மரணம் ஏன் இங்கு நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து பொது மக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. இது சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதைத் தொடர்ந்து பலரும் வாக்குப் பெட்டிகள் வைத்திருக்கும் இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இவனுங்க என்னமோ பண்ண Try பண்ணுறானுங்க ஆனா என்னனு தான் தெரியமாட்டேங்குது😠
சென்னை "#லயோலா_கல்லூரி வளாகத்தில் சர்ச்சைக்குரிய வாகனம்"
கோவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜி.சி.டி கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு கொண்டு வரப்பட்ட @mkstalin @Udhaystalin @isai_ pic.twitter.com/88v3ZKuwAQ
— kanchanaPillathi (KPR) (@kanchana030391) April 15, 2021