இத்தாலியில் இந்திய வகையைச் சேர்ந்த கொரோனா 2 நபர்களுக்கு உறுதியானதால், அந்நாடு இந்தியாவிலிருந்து வரும் நபர்களுக்கு தடை விதித்துள்ளது.
இத்தாலியினுடைய வடகிழக்குப் பகுதியில் பஸ்ஸானோ என்ற நகரம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மகள் மற்றும் தந்தை அங்கு வசித்து வருகிறார்கள். இதனையடுத்து இவர்கள் சமீப காலத்தில் இந்தியாவிற்கு வந்துவிட்டு மீண்டும் இத்தாலிக்கு திரும்பியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு இந்தியாவில் தற்போது பரவிவரும் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்கள். இந்த நிலையில் இத்தாலிய நாட்டின் சுகாதார அமைச்சரான ராபர்டோ ஸ்பிரான்ஸா பயணத்திற்கான புதுவித கட்டுப்பாட்டை அறிவித்தார். அதாவது இத்தாலிய நாட்டிற்குள் இந்தியாவில் கடந்த 14 நாட்களினுள் இருந்தவர்கள் எவரும் நுழைவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிக்கை விடுத்துள்ளார்.