Categories
உலக செய்திகள்

இவங்க தான் “REAL HERO”…. பற்றி எரிந்த மருத்துவமனை…. மருத்துவர்களின் பாராட்டுக்குரிய செயல்…!!

ரஷ்யாவின் Blagoveschensk எனும் இடத்தில் அமையப்பெற்றுள்ள இதய அறுவை சிகிச்சை மருத்துவமனையில் 8 மருத்துவர்களும் செவிலியர்களும் இணைந்து நோயாளி ஒருவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய தொடங்கியுள்ளனர். அச்சமயம் திடீரென மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவர்களை பத்திரமாக மீட்டனர்.

ஆனால் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மட்டும் வெளியில் வர மறுப்பு தெரிவித்து தொடர்ந்து தங்களது கடமையை செய்து கொண்டிருந்தனர். இதனிடையே அறுவை சிகிச்சை அறையில் நெருப்பினால் ஏற்பட்ட புகை சூழ்ந்து கொண்டதால் அதனை வெளியேற்றும் பணியை தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்டனர்.

இரண்டு மணி நேர அறுவை சிகிச்சையை முடித்த மருத்துவர்கள் குறிப்பிட்ட நோயாளியை அருகில் இருந்த வேறு ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் Filatov கூறுகையில், “நாங்களும் மனிதர்கள்தான் நிச்சயமாக எங்களுக்கும் பயம் இருந்தது. ஆனால் நோயாளியை காப்பாற்றாமல் விடுவது சரியல்ல. அதனால் அறுவை சிகிச்சையை தொடர்ந்து செய்தோம்” என கூறியுள்ளார்.

Categories

Tech |