Categories
தேனி மாவட்ட செய்திகள்

இவங்க தியாகத்தை போற்றும் விதமாக நிகழ்ச்சி…. முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு…. தேனி மாவட்டம்….!!

தேனியில் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் போது இறந்த தீயணைப்பு படைவீரர்களின் தியாகத்தை போற்றும் விதமாகவும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டத்திலிருக்கும் 8 தீயணைப்பு நிலையத்திலும் இந்த தினம் அனுசரிக்கப்பட்டது.

இதனையடுத்து தேனியிலிருக்கும் தீயணைப்பு நிலையத்திலும் நீத்தார் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு துறையின் அலுவலரான கல்யாணகுமார் மற்றும் சில முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டு நீத்தார் நினைவுத் தூண் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

Categories

Tech |