Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இவங்க தொல்லை தாங்க முடியல…. மக்களுக்கு தொடர்ந்து இடையூறு…. 6 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்….!!

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக குற்றச்செயல்களில் ஈடுபட்ட வந்த ஆறு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையத்தில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்தார் . இவர் அப்பகுதியில் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பிரபல ரவுடியாக இருந்திருக்கிறார். இந்நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார் . இச்சம்பவத்தினை வழக்குப்பதிவு செய்த காவலர்கள் விசாரணையை மேற்கொண்டனர்.

இவ்விசாரணையின் அடிப்படையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல ரவுடி வசூல்ராஜா மற்றும் சேலத்தைச் சேர்ந்த பாலமுருகன் , சாரதி உள்பட 30 நபர்களை போலீசார் கைது செய்தனர் . இந்த முப்பது நபர்களில் தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டுவந்த ஆறு நபர்களுக்கு குண்டர் சட்டம் போட்டு கைது செய்ய இன்ஸ்பெக்டர் சிவகுமார் மாநகர கமிஷனரை கேட்டுக்கொண்டார் . அந்த வகையில் ஆறு பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய   கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |