Categories
உலக செய்திகள்

இவங்க நாட்டை பிரிக்க சூழ்ச்சி செய்றாங்க … உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு…!!!

உக்ரைனை  பிரிப்பதற்கு ரஷ்ய அதிபர் சூழ்ச்சி செய்கிறார் என உக்ரைன்  அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.

உக்ரைனில் போலியான குடியரசை உருவாக்குவதற்க்காகவும் நாட்டைப் பிரிப்பதற்காகவும்  ரஷ்ய அதிபர் புதின் முயற்சித்து வருவதாகக் அதிபர் ஜெலன்ஸ்கி  குறை கூறியுள்ளார். இதுபற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர்,கெர்சன்  உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றியுள்ளன உள்ளூர் தலைவர்களை மிரட்டியும், அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தும் போலி குடியரசை  உருவாக்க முயற்சிப்பதாக கூறியுள்ளார்.

ரஷ்ய வீரர்களிடம்  வறுமையும் உக்ரைனை  வெற்றி கொள்வதற்கான உத்வேகமும் இல்லை என கூறிய ஜெலன்ஸ்கி,  அவர்கள் பயங்கரவாதத்தையும், ஆயுதங்களையும் மட்டுமே கொண்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் உக்ரைன் மட்டுமின்றி  ஐரோப்பாவின் நலனுக்காகவும் நட்பு நாடுகள் தொடர்ந்து உதவிகளை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |