ஐஸ்வர்யா தனுஷ் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட ரஜினிகாந்த் தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து செய்தி அனைவருக்கும் தெரிந்ததே. இவர்கள் பிரிவிற்கு என்ன காரணம் என்று தெரியாததால் பல பேர் பலவிதமாக கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இவர்களை சேர்த்து வைக்கும் பணிகளை இவரது குடும்பத்தினர் செய்து வருகின்றனர். இது போன்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது இணையதளத்தில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதாவது தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜாவிற்கு ஊரில் ஒரு திரையரங்கு இருக்கிறதாம் அந்த திரையரங்கத்தில் நஷ்டமடைய அவருக்கு கடன் சுமை அதிகரித்துள்ளதாம்.
மேலும் அவரது மகனான தனுஷிடம் கடனை அடைக்க உதவி கேட்டுள்ளார் கஸ்தூரிராஜா. அந்த சமயத்தில் தனுஷ் தயாரித்த காலா படம் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாம். இருப்பினும் தன்னால் முடிந்த தொகையை தன் அப்பாவிற்கு கொடுத்தாராம் தனுஷ். இதனை தொடர்ந்து மீதி பணத்தை தன் சம்பந்தி ரஜினியிடம் கேட்கலாம் என முடிவெடுத்த கஸ்தூரி ராஜா, ரஜினியை தொடர்பு கொள்ள பல முயற்சிகள் செய்தும் தொடர்பு கொள்ள இயலவில்லையாம். இந்த விஷயம் தனுஷ்க்கு செல்லவே அவர் கடும் கோபத்திற்கு ஆளானார். இது தொடர்பாக ஐஸ்வர்யா, தனுஷ் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட துவங்கியது. எனவே இவர்கள் பிரிவுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.