மகாராஷ்டிராவில் மீண்டும் தொற்று அதிகரிக்கும் சூழ்நிலை உருவானால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது கொரோனா குறைந்து கொண்டு வருவதால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தடுப்பூசி செலுத்தி கொண்ட பொதுமக்கள் வரும் 15ம் தேதி முதல் மும்பை புறநகர் ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: இரண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 15ஆம் தேதி முதல் புறநகர் ரயில்களில் பயணம் செய்யலாம். இரண்டு டோஸ்களும் செலுத்திக்கொண்டது தொடர்பான தகவல்களை பதிவு செய்வதற்காக ஒரு ஆப் அறிமுகம் செய்ய உள்ளோம். பொதுமக்கள் அந்த ஆப் மூலமாக பாஸ்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார். இப்போது சில தரவுகளை வழங்கியுள்ளோம். ஆனால் தொற்று மீண்டும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவானால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.