ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த 2 இந்தியர்களை அடையாளம் கண்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அபுதாபியிலுள்ள விமான நிலையம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளார்கள்.
அவ்வாறு படுகாயமடைந்த 6 பேரில் இருவர் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த 2 இந்தியர்கள் யாரென அடையாளம் கண்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் அவர்களது குடும்பத்துடன் தாங்கள் தொடர்பில் இருப்பதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.