மதுரையில் வைக்கோல் படப்பு தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் அனைத்து வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பதற்காக தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருக்கும் அல்லிகுண்டம் என்ற கிராமத்தில் அதிமுக வேட்பாளரான ஐயப்பன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரை வரவேற்பதற்காக பொதுமக்களும், தொண்டர்களும் பட்டாசு வெடித்ததில் அதிலிருந்து ஏற்பட்ட தீப்பொறி அங்கிருந்த வைக்கோல் போரில் பட்டதால் தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்நிலையில் கிராம மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து விரைவாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தை மையப்படுத்தி தேர்தல் வேட்பாளர்களின் பிரச்சாரத்தின் போது இதுபோன்ற அசம்பாவித செயல் நடக்காதவாறு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.