Categories
சினிமா தமிழ் சினிமா

இவங்க வேற….! “பிரபல நடிகர் படத்தை கடுமையாக விமர்சித்த கஸ்தூரி”…. என்ன சொல்லிருக்காங்க…. நீங்களே பாருங்க….!!!!

நடிகர் விக்ரம் மற்றும் துரு விக்ரம் இருவரும் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் குறித்து நடிகை கஸ்தூரி இணையதளத்தில் விமர்சனம் ஒன்றை பதிவிட்டுள்ளார். 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணின் இசையமைப்பில் விக்ரம் மற்றும் துரு விக்ரம் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘மகான்’. இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் பாபிசிம்ஹா சிம்ரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் சமீபத்தில் OTT யில் வெளியாகி பல கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படக்குழுவினர் ‘மகான்’ திரைப்படத்தின் வெற்றி விழாவை கொண்டாடினர்.

நடிகர் விக்ரம் தனது அனைத்து படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் சற்று அமைதியாக தான் நடித்திருக்கிறார். அதே சமயத்தில் துரு விக்ரம் தனது அசத்தலா நடிப்பின் மூலம் ரசிகர்களை ஈர்த்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த பலர் தங்களின் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினர். நடிகர் விக்ரமுக்கு சமீபத்தில் வெளிவந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்றாலும் இந்த படம் ஓரளவு கை கொடுத்தது எதை சொல்லலாம்.

இந்நிலையில் ‘மகான்’ படம் குறித்து பிரபல நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். அந்த விமர்சனத்தில் அவர் கூறியதாவது, “அப்பா-மகன் இருவரும் இணைந்து நடித்த படம் ஓடாது என்பதற்கு ‘மகான்’  படம் ஒரு எடுத்துக்காட்டாகி விட்டது. அப்பா-மகன் இருவரும் இணைந்து நடித்த ஏதோ ஒரு படம் ஓடி இருக்கிறதா, அப்படி ஏதாவது ஓடியிருந்தால் அப்படத்தின் பெயரை சொல்லுங்கள் பார்ப்போம்” என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது இணையதளத்தில் செம வைரலாகி வருகிறது.

Categories

Tech |