ஸ்டெயின் மற்றும் லி ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்ளவே மிகவும் கடினமாக உணர்ந்தேன் என ரோகித் சர்மா கூறியுள்ளார்
கொரோனா தொற்று பரவலின் காரணமாக இந்த வருடம் நடக்கவிருந்த ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் அனைவரும் வீட்டில் ஓய்வு எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷமி மற்றும் ரோஹித் சர்மா இன்ஸ்டாகிராமில் உரையாடி உள்ளனர். அப்பொழுது ரோஹித் சர்மாவிடம் ஷமி பிடித்த பஞ்சு பந்துவீச்சாளர் பற்றி சொல்லுமாறு கேட்டுள்ளார்.
அதற்கு ரோகித் “தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இந்தியா அணிகள் ஆடிய முத்தரப்பு தொடரில் தான் நான் அறிமுகமானேன். அப்போது தென் ஆப்பிரிக்க அணியின் டேல் ஸ்டெய்னை எதிர்கொள்ள எனக்கு மிகவும் திணறினேன். நான் அதுவரை ஆடிய பந்துகளில் இருந்து மிகவும் வேகமாக பந்துவீசினார். அதேபோன்று ஆஸ்திரேலிய அணியின் பிரெட் லீ மிகவும் வேகமாக பந்து வீசுவார் அவரை எதிர்கொள்ள கடினமான பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது.
தொடர்ந்து அவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் பொழுது அவர்களது பந்துவீச்சை ரசிக்கவும் தொடங்கினேன். தற்போது இருக்கும் பந்துவீச்சாளர்களில் தென்னாப்பிரிக்காவின் ரபாடா ஆஸ்திரேலியாவின் ஹெசல்வுட்டும் என்னை பிரமிப்பில் ஆழ்த்துகின்றனர்” எனக் கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு நேர்காணலில் பயிற்சியின்போது யார் பந்துகளை எதிர்கொள்ள கடினமாக இருக்கும் என ரோஹித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் ஷமி பெயரை கூறியது குறிப்பிடத்தக்கது.