கன்னியாகுமரியில் ஆவின் நிறுவனம் பணியாளரை அந்த நிறுவனத்தின் தலைவரும், அதிமுக பிரமுகருமான ஒருவர் மிரட்டியதோடு , அடியாட்களை வைத்து தாக்கியதில் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார்.
நாகர்கோவிலில் உள்ள ஆவின் நிறுவனத்தில் கடந்த 23 ஆண்டுகளாக ஓட்டுனராக பணிபுரிந்து வருபவர் ராஜன். இவருக்கும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வேறு ஒரு பணியாளருக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. ஆனால் ஆவின் நிறுவனத்தின் தலைவரும், குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான அசோகன் எதிர்தரப்பு பணியாளருக்கு ஆதரவாக இருந்து வருவதாக பாதிக்கப்பட்ட ராஜன் தரப்பில் கூறப்படுகிறது.
ராஜனை ஆவின் நிறுவனத்தில் வைத்து மிரட்டிய சோகன், இவனை வண்டியில் தூக்கி போடுங்கடா என்று மிரட்டும் காட்சிகளை தனது செல்போன் மூலம் படம் பிடித்துள்ளார் ராஜன். பின் வேலை முடிந்து வெளியே வரும்போது அவருடைய ஆட்கள் ராஜனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்வு குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜனை தரையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.